

சாப்ட்பேங்க் குழுமத்தின் நிர்வாக இயக்குநர். 2015-ம் ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து டிரிப் அட்வைசர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை லிங்க்ட்இன் நிறுவனத்தின் புராடெக்ட் பிரிவின் மூத்த துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
அஸ்டேர் டேட்டா நிறுவனத்தின் முதலீட்டாளராக இருந்தவர்.
2003-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை கூகுள் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் புராடெக்ட் பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பி.டெக் பட்டமும் ஹார்வேர்டு பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
பட்கை நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் துணைத்தலைவர்.