

தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்தன. நிப்டி 8100 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிந்தது. கடந்த நான்கு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் மேலும் 66.72 புள்ளிகள் சரிந்து 26307 புள்ளியில் முடிவடைந்தது. நிப்டி 21.95 புள்ளிகள் சரிந்து 8082 புள்ளியில் வர்த்தகம் முடிந்தது. 8124 புள்ளிக்கும் 8062 புள்ளிக்கும் இடையே நேற்றைய வர்த்தகம் இருந்தது.
பேங்க் ஆப் ஜப்பான் தன்னு டைய நிதிக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது சாதகமான சூழல் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித் தாலும், துருக்கியில் நடந்த துப்பாக்கி சூடு பதற்றமான சூழலை உருவாக்கி இருக்கிறது. மேலும் விடுமுறை நாட்கள் நெருங்குவதால் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்க ளுடைய வர்த்தக அளவினை குறைத் திருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வங்கி, ஹெல்த்கேர் மற்றும் உலோக பங்குகள் சரிவை சந்தித் தன. மாறாக தகவல் தொழில் நுட்பம், கன்ஸ்யூமர் டியூரபிள் ஆகிய துறைகளில் வாங்கும் போக்கு இருந்தது. எஸ்பிஐ பங்கு 2.6 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி 2.18 சதவீதம் சரிந்தது. பஜாஜ் ஆட்டோ, லுபின், டாடா ஸ்டீல், ஹீரோமோட்டோ கார்ப், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிந்தன. மாறாக டிசிஎஸ், கெயில், ஐடிசி, கோல் இந்தியா, என்டிபிசி மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 19 பங்குகள் சரிவை சந்தித்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிந்து முடிந்தன. திங்கள்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 535 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்றனர். ஆசிய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவியது. ஜப்பான் பங்குச்சந்தை சிறிதளவு உயர்ந்து முடிவடைந்தன. ஹாங்காங் மற்றும் சீன பங்குச்சந்தைகள் சரிந்தன.
ரூபாய் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68-க்கு கீழே சரிந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ரூபாய் மதிப்பில் சரிவு தொடர்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 18 பைசா சரிந்து ஒரு டாலர் 68.05 ரூபாயில் முடிவடைந்தது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் 11 பைசா சரிவு ஏற்பட்டது.