

என்னுடை சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமனம் செய்யப்பட்ட வீரல் ஆச்சார்யா கூறியிருக்கிறார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமனம் செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார்.
துணை கவர்னராக மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். வரும் ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வார் என ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தவர் என ஆச்சார்யா அடிக்கடி குறிப்பிடுவார். இவருடன் இணைந்து மூன்று ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.
ரகுராம் ராஜனை போலவே பேராசிரியராக இருந்து ரிசர்வ் வங்கிக்கு வருகிறார் ஆச்சார்யா.