

வங்கியல்லாத நிதி நிறுவனமான ஐஎப்எம்ஆர் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
இதற்கு முன்பு நிறுவனத்தின் தலைமை ரிஸ்க் அலுவலராக 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தார்.
கேபிடல் மார்க்கெட், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், மைக்ரோ பைனான்ஸ், முதலீட்டு வங்கி, தொழில் உத்திகள் உள்ளிட்ட துறைகளில் வல்லுனர்.
கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் நிதியியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
இந்திய நிதி அமைச்சகம், உலக வங்கி, சிகாகோ மெர்க்கண்டைல் எக்ஸ்சேஞ்ச், இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்டவற்றின் ஆலோசனை அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.
கோவா பல்கலைக்கழகத்தில் கணித பாடப்பிரிவில் இளநிலை பட்டமும், மேலாண்மை உயர்கல்வியும் முடித்தவர். நிதியியலில் பிஹெச்டி பட்டம், பைனான்ஸியல் ரிஸ்க் மேலாண்மை கல்வியும் முடித்துள்ளார்.