

தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்த வேண்டும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு செய்யப் படும் முதலீடுகளுக்கு சலுகை வேண்டும் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண் டும் என இந்திய ஐடி நிறுவனங் களின் சங்கமான நாஸ்காம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.
பட்ஜெட் தொடர்பான விவாதத் தில் நிதி அமைச்சர் அருண் ஜேட் லியை சந்தித்த பிறகு நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொழில் புரிவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும், சர்வதேச அளவில் தொழில் புரிவதற்கு சம வாய்ப்பு வேண்டும். கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது குறித்து தெளிவான விளக் கம் தேவை. உள்நாட்டு முதலீடு களை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர் களை விட உள்நாட்டு முதலீட் டாளர்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. அதனை நீக்க வேண்டும். ஜிஎஸ்டி குறித்த தெளிவு தேவை என்று கூறினார்.