

புதுடெல்லி: பொதுமக்களிடம் மிகவும் பிரபலமான தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட்மற்றும் லிம்கா முதல் கோக கோலா வரையிலான பிராண்டுகளை விற்பனை செய்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிஸ்லரி பிராண்டையும் விற்பனை செய்ய ரமேஷ் சவுகான் (82) முடிவு செய்துள்ளார். இவர், பிஸ்லரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
இந்தியாவில் பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீர் வர்த்தகத்தில் பிஸ்லரி நிறுவனம் பெரும் பங்கை வகித்து வருகிறது. இந்தநிறுவனத்தின் பங்குகளை வாங்கடாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் (டிசிபிஎல்) விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்துதல் ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.6,000 – 7,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கையகப்படுத்துதல் ஒப்பந்தத்தின்படி தற்போதுள்ள நிர்வாகமே இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்ட்விற்பனை குறித்து ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளதாவது:
அண்மைக் காலமாக எனது உடல் ஆரோக்கியம் நலிவடைந்துள்ளது. இந்த நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வாரிசு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனது மகள்ஜெயந்திக்கும் தொழில் நடவடிக்கைகளில் அவ்வளவு ஆர்வம் இல்லை. பிஸ்லரி பிராண்டை விற்பனை செய்வது இன்னும் வேதனையளிக்கும் முடிவாகவே உள்ளது. இருப்பினும், டாடா குழுமம் அந்த பிராண்டை மேலும் வளர்ச்சிப் பெறசெய்து கட்டிக்காக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உள்ளது.
மதிப்பு மற்றும் ஒருமைப்பாட்டில் டாடாவின் கலாச்சாரத்தை அதிகம் விரும்புவன் நான். அதனால்தான், ஏராளமான போட்டியாளர்கள் பிஸ்லரி பிராண்டை வாங்க முன்வந்தபோதும், டாட்டாவை மட்டுமே நான்தேர்வு செய்துள்ளேன் என்றார்.
நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வாரிசு இல்லாததால் விற்பனை செய்ய முடிவு செய்தேன்