

அமெரிக்காவின் மிகப் பெரிய தகவல் மேலாண்மை நிறுவனமான நெட்ஆப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு மே மாதம் வரை இதே நிறுவனத்தின் செயல்பாட்டு பிரிவுக்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
அக்கெமய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் புராடெக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2011-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை நெட்ஆப் நிறுவனத்தின் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் பிரிவுக்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் அப்ளிகேஷன் நெட்வொர்க் பிரிவுக்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
மெக்கென்ஸி நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.