

ஜெய்பிரகாஷ் குழும நிறுவனங்களில் ஒன்றான நீர் மின் நிலைய ஆலைகளை ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜெய்பிரகாஷ் நீர் மின் ஆலை 1,800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மொத்தம் 3 ஆலைகள் மூலம் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. நதி நீர் மூலம் அதாவது மரபு சாரா எரிசக்தியாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் ஆயுள் காலம் 50 ஆண்டுகள் என கணிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் மேலாகும்.
இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித் துள்ளது. தனியார் துறையில் மிக அதிக தொகைக்கு அதாவது தொலைத் தொடர்புத் துறைக்கு அடுத்தபடியாக கையெழுத்தாகும் ஒப்பந்தம் இதுவாகும்.
100 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்குச் சொந் தமான ரிலையன்ஸ் கிளீன் ஜென் லிமிடெட் (ஆர்சிஎல்) நிறுவனமும், ஜெய்பிரகாஷ் பவர் வெஞ்சர்ஸ் நிறுவனமும் கையெழுத்திட் டுள்ளன.
ஜெய்பிரகாஷ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 7,800 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தனியார் துறையில் அதிக மின்னுற்பத்தி செய்யும் நிறுவனமாக ரிலையன்ஸ் திகழ்கிறது. திங்கள்கிழமையன்று வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனப் பங்குகள் மற்றும் ஜெய்பிரகாஷ் நிறுவனப் பங்குகளின் விலைகள் ஏற்றம் பெற்றன.