

மும்பை: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் செவ்வாய்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 274 புள்ளிகள் (0.45 சதவீதம்) உயர்ந்து 61,418 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 84 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயர்வடைந்து 18,244 ஆக இருந்தது.
மூன்று நாட்களாக வீழ்ச்சி கண்டுவந்த பங்குச்சந்தை செவ்வாய்கிழமை சிறிது ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 85.45 புள்ளிகள் உயர்வுடன் 61,230.29 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16.65 புள்ளிகள் உயர்வடைந்து 18,176.60 ஆக இருந்தது.
செவ்வாய்கிழமை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உலகளாவிய சந்தைகளின் கலவையான போக்குகளுக்கு மத்தியில் தொடக்கத்தில் சரிவைச் சந்தித்தாலும் இறுதியில் கடந்த மூன்று நாள் சரிவில் இருந்து மீண்டு உயர்வுடன் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 274.12 புள்ளிகள் உயர்ந்து 61,418.96 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 84.25 புள்ளிகள் உயர்ந்து 18,244.20 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை மருதி சுசூகி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ பங்குகள் ஏற்றம் அடைந்திருந்தன. நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சியை சந்தித்திருந்தன.