சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் செவ்வாய்க்கிழமை சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்து 61,230 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16 புள்ளிகள் உயர்வு அடைந்து 18,176 ஆக இருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை 09:50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 85.45 புள்ளிகள் உயர்வுடன் 61,230.29 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16.65 புள்ளிகள் உயர்வடைந்து 18,176.60 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தையின் குழப்பமான போக்கின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட போதிலும், இன்றைய வர்த்தகம் சற்று ஏற்றத்துடனேயே தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை எல் அண்ட் டி, இந்துஸ்தான் யுனிலீவர், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, டாடா ஸ்டீல்ஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சியில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in