Published : 15 Jul 2014 05:09 PM
Last Updated : 15 Jul 2014 05:09 PM

பணவீக்கம் 7.31 சதவீதமாகக் குறைவு

சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.31 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய மாதம் இது 6.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் இது 8.28 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள்களின் விலை குறிப்பாக வெங்காயத்தின் விலை குறைந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

சில்லறை பணவீக்கம் நுகர் வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படு கிறது. 2012-ம் ஆண்டு ஜனவரி யில் 7.65 சதவீதமாக இருந்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் பணவீக்க அளவு இந்த அளவுக்குக் குறைந்துள்ளது.

பணவீக்கம் குறைந்த போதி லும் கடனுக்கான வட்டி விகிதத்தை அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி அறி விக்க உள்ள கடன் கொள்கையில் குறைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர். அத்துடன் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்ற சூழலும் வட்டிக் குறைப்பு சாத்திய மில்லை என்பதையே உணர்த்து வதாக தெரிவித்துள்ளனர்..

உணவுப் பணவீக்கம் 7.97 சதவீதமாகக் குறைந்துள்ளது. மே மாதத்தில் இது 9.56 சதவீதமாக இருந்தது.

கடந்த மாதம் காய்கறிகளின் விலை உயர்வு 8.73 சதவீத அளவுக்கு இருந்தது. மே மாதத்தில் இது 15.27 சதவீத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.

முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றின் விலை உயர்வு 8.27 சதவீத அளவுக்கு இருந்தது. இது மே மாதத்தில் 10.11 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது.

இதேபோல பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களின் விலை 11.06 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 11.28 சதவீத அளவுக்கு காணப்பட்டது.

உணவு மற்றும் குளிர்பானங் களின் பணவீக்கம் 7.9 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 9.4 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது.

வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்தது உணவுப் பணவீக்கம் குறைந்ததற்கு முக்கி யக் காரணமாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வெங்காயத்தின் விலை 115 சதவீத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.

வெங்காயம் தவிர்த்து உருளைக் கிழங்கு விலை 42.52 சதவீதம் உயர்ந்துள்ளது. பழங் களின் விலை கடந்த ஜூனில் 21.40 சதவீதம் உயர்ந்துள்ளது. விலை 10.82 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை 10.53 சதவீதத்தி லிருந்து 9.04 சதவீதமாகக் குறைந் துள்ளது.

எரிபொருள் விலை 4.58 சதவீத மாக இருந்தது. இது மே மாதத்தில் 5.07 சதவீதமாக இருந்தது.

பழங்களின் பணவீக்கம் 23.174 சதவீதத்திலிருந்து 20.64 சதவீத மாகக் குறைந்துள்ளது.

அரசு வெளியிட்ட அட்டவணையின்படி பணவீக்கம் நகர்ப் பகுதியில் 7.72 சதவீதமாகவும் கிராமப் பகுதியில் 6.82 சதவீதமாகவும் இருந்தது. இது மே மாதத்தில் நகர்ப் பகுதியில் 8.86 சதவீதமாகவும், கிராமப் பகுதியில் 7.55 சதவீதமாகவும் இருந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x