

முக்கியமான 15 பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குநர் கூட இல்லை. பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணைய மான செபி விதிமுறைகளின் படி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்கு நராவது இருக்க வேண்டும். இந்த விதி கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப் பட்டது. ஆனால் டிசம்பர் 13-ம் தேதி நிலவரப்படி 15 பொதுத்துறை நிறுவனங்களில் பெண் இயக்கு நர்கள் இல்லை.
பாரத் பெட்ரோலியம், கெயில், பவர் பைனான்ஸ், ஆர்.இ.சி., சிபிசிஎல், ஸ்கூட்டர்ஸ் இந்தியா, எம்எம்டிசி, நெய்வேலி லிக்னைட் உள்ளிட்ட 15 நிறுவனங்களில் பெண் இயக்குநர் நியமனம் செய் யப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மக்களவைக்கு அளித்த எழுத்து பூர்வமான பதிலில் தெரிவித்தார்.