

சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் நிறுவனம் இந்தியாவின் தர குறியீட்டில் மாற்றமிருக்காது என குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செய்து வந்த நிலையில் தர மதிப்பீடு உயர்த்தப்பட வாய்ப் பில்லை என எஸ் அண்ட் பி கூறியிருக்கிறது.
இந்தியாவினுடைய தர குறியீடு ‘பிபிபி-’ என குறிப்பிட்டுள்ளது. முதலீடுகள் குறைந்துள்ளதன் காரணமாக தரக் குறியீட்டில் எந்த மாற்றமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தரக் குறியீட்டில் இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டிலோ மாற்றமிருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த தரக்குறியீட்டின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலத்திலும் மதிப்பீடு இருக்கும் என கூறியுள்ளது.
பிபிபி- என்கிற குறியீடு குறைவான முதலீடு தரம் கொண்ட குறியீடாகும். இந்தியா மேற்கொண்டு வரும் பொருளா தார சீர்திருத்தங்கள் காரணமாக தரகுறியீடு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக உள்நாட்டு நிகர உற்பத்தியில் மத்திய அரசின் கடனை 60 சதவீதத்துக்கும் கீழாக குறைப்பதற்கான முயற்சிகளில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது ஜிடிபியிடன் ஒப்பிடும்போது மத்திய அரசின் கடன் 69 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.