

இந்தியாவின் முக்கிய தொழில் குழுமமான டிவிஎஸ் நிறுவனத் தின் ரியல் எஸ்டேட் பிரிவு நிறுவனமான டிவிஎஸ் எமரால்ட் ஹெவன் நிறுவனம் ரூ.400 கோடி முதலீட் டில் சென்னையில் கட்டுமான திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட கிரீஸ் ஹில்ஸ் திட்டத்துக்கு சிங்கப்பூரின் கட்டிட மற்றும் கட்டுமான ஆணையம் வழங்கும் உயரிய அங்கீகரமான கான்குவாஸ் மதிப்பு பெற்றுள் ளது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
ஆணையத்தின் செயல் இயக்குநர் சூ வாட் பின் கலந்து கொண்டு இதை வழங்கினார். நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சந்திரமெளலி பேசும்போது எங்களது முதல் கட்டுமான திட்டத்திலேயே நாங்கள் சர்வதேச தர மதிப்பீட்டில் உயர்ந்த தரத்தை பெற்றுள்ளோம். முதல் கட்டுமான திட்டத்தின் அனைத்து வீடுகளையும் விற்பனை செய்து விட்டோம். அடுத்ததாக ரூ.400 முதல் ரூ.500 கோடி முதலீட் டில் கிரீன் ஏக்கர்ஸ் என்கிற கட்டுமான திட்டத்தை ஜனவரியில் தொடங்கினோம். தற்போது அதில் 50 சதவீத பணிகள் முடிவடைந் தன. டிசம்பர் மாதம் வாடிக்கை யாளர்களுக்கு வீடுகளை ஒப்படைக்க உள்ளோம் என்றார்.