

சென்னை: சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நேற்று கொரிய வர்த்தக கண்காட்சி தொடங்கியது.
நவம்பர் 20-ம் தேதி வரையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அழகு சாதனப் பொருள்கள், உணவு,மின்னணு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 20 கொரிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இக்கண்காட்சி குறித்து கொரிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு முகமையான கோட்ராவின் இயக்குநர் ஜிஹ்வான் இயுன் கூறுகையில், “தென்னிந்தியாவின் கலாச்சர தலைநகராக சென்னை திகழ்கிறது. சென்னை மக்களிடையே கொரிய தயாரிப்புகளை கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இது சென்னையில் நடைபெறும் முதல் கொரிய கண்காட்சி ஆகும்” என்றார்.