

ஆட்டொமொபைல் துறையில் 2026-ம் ஆண்டுக்குள் 6.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மாருதி நிறுவனம் தெரிவித் துள்ளது. உள்நாட்டு நிகர உற்பத்தி மதிப்பில் ஆட்டோமொபைல் துறையின் பங்கு 12 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகவா பேசும்போது, அடுத்த பத்தாண்டுகளில் இந்திய ஜிடிபியில் ஆட்டோமொபைல் துறையின் பங் களிப்பு 12 சதவீதத்துக்கும் அதிக மாக இருக்கும். நாங்கள் 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6.5 கோடி வேலைவாய்ப்புகளை உரு வாக்குவோம். எனவே எங்களுக்கு அடுத்த பத்தாண்டுகள்தான் இலக்கு என்று கூறினார்.
இந்திய ஜிடிபி மதிப்பில் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பங்களிப்பு தற்போது 7.1 சதவீத மாக உள்ளது. இந்த துறை சுமார் 3.2 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கள் அளித்து வருகிறது என்றும் அயுகவா குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு கொடுக்கப்பட்ட ஊக்கம் காரணமாக சுமார் 3,500 கோடி டாலர் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் எங்களது செயல்பாடுகளும் இருக்கும். பரஸ்பர பலன் கொடுப்பது மற்றும் சமூக பொருளாதார சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிரந்தரமான, சீரான வளர்ச்சியை கொடுக்க வேண்டியது எங்களது கடமையாகும்,
உலக அளவில் முன்னணி மூன்று நிறுவனங்களுக்குள் இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு.
அதை மட்டுமே இலக்காக வைத் தாலும் நாங்கள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்களை கொடுப்பதற்கு முயற்சி செய்கிறோம். நாட்டின் சாலை பாதுகாப்பு சார்ந்து அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது என்றும் கூறினார். இதனால் சமூகத்தில் பல அமைதியான மாற்றங்கள் உருவாகி வருகின்றன என்றும் கூறினார்.
வலுவாக அனுமதி முறைகள் மற்றும் அமல்படுத்துதல் இல்லை யென்றால் இந்த துறை முன் னெடுத்துவரும் மேம்பாட்டு முயற்சி கள் பலனளிக்காது. எங்களது சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளில் கிராமப்புற மேம்பாடு, திறன் வளர்ப்பு, பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் - சாலை பாதுகாப்பு போன்ற வற்றுக்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். தொழில்துறை சமுக பொறுப்புணர்வு திட்டம் அமல்படுத்தபடும்பட்சத்தில் மிகப் பெரிய அளவில் சமூகத்தில் நல்ல விளைவுகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.