

வோடபோன் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வோடபோன் அயர்லாந்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவவர்.
1998-ம் ஆண்டு வோடபோன் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். இந்நிறுவனத்தின் தொழில் திட்ட பிரிவு குழுத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
முன்ஸ்டெர் பல்கலைக்கழகத்தில் அக்கவுண்டிங் மற்றும் சர்வதேச சந்தை மேலாண்மை பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
வோடபோன் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நிறுவனத்திற்கு இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
கமர்ஷியல் இன்வெஸ்ட்மெண்ட், உத்திகள் வகுப்பது, நிதியை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றில் சிறந்த அனுபவம் கொண்டவர்.
வோடபோன் குழும கமர்ஷியல் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதி இயக்குநராக இருந்தவர்.