

பியூச்சர் குழுமத்தின் அங்கமான பிக் பஜார் ஸ்டோர்களில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ரூ. 2 ஆயிரம் வரை ரொக்கமாக எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 24-ம் தேதியிலிருந்து இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார். பிக் பஜார் விற்பனையகம் மற்றும் எஃப்பிபி ஸ்டோர்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் 258 விற்பனையகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாரத ஸ்டேட் வங்கி உதவியோடு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் எந்த ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களும் ஏடிஎம் கார்டு கார்டு மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்களைப் போக்கும் வகையிலும், மத்திய அரசின் திட்டத்தை வெற்றிகரமானதாக ஆக்கவும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.