Published : 06 Nov 2016 01:03 PM
Last Updated : 06 Nov 2016 01:03 PM

பிரெக்ஸிட்: நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவானது நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை உருவாக்கி யுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் இதைத்தான் உணர்த்துகின்றன.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரிட் டன் பிரதமர் தெரசா மே, இதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்த் தால் அதில் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஐரோப்பிய கூட்ட மைப்பிலிருந்து பிரிட்டன் வெளி யேறிய பிறகு அதன் நடவடிக் கைகள் எப்படி இருக்கும் என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது.

பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட் டன் நாடாளுமன்றத்தின் இறை யாண்மையைக் கேள்விக்குள் ளாக்கியுள்ளது அங்குள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சமீபத்திய தீர்ப்பு. விதி 50 தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி நிறைவேற்றலாம் என்ற பிரதமரின் முடிவு தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பின் காரணமாக இது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரெக்ஸிட் தொடர்பான முதல் பிரச்சினை டிசம்பர் மாதம் அந் நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப் பில் அடங்கியுள்ளது. பிரெக்ஸிட் தொடர்பான அரசின் மனு அப் போதுதான் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதற்கு முன்பாக பிரெக்ஸிட் எவ்விதம் நிறைவேறும், எந்த காலவரையறைக்குள் அது மேற்கொள்ளப்படும் என்ற பட்டியலை அரசு வெளியிட முடியாது. மேலும் மார்ச் மாதம் காலாவதியாகும் விதி 50 குறித்த கேள்விகளுக்கு பதில் கிடையாது.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் முதலீட்டு மேலாளரான ஜினா மில்லர், அர சுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை எதிர்கொண்டு பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தமும் அரசுக்கு உள்ளது.

பிரெக்ஸிட் நிறைவேற்றத்தில் நாடாளுமன்ற நடைமுறைகள் மிகவும் மெத்தனமாக உள்ளதாக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விதி 50-க்கு எதிராக வாக்களிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பி லிருந்து வெளியேறலாம் என்ற மக்களின் கருத்துக்கு தாங்கள் மதிப்பளிப்பதாகவும், அதை உரிய வகையில் நிறைவேற்ற அரசு முயற்சிக்க வேண்டும். அதற்கு தாங் கள் முழு ஆதரவு அளிப்பதாக தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் தெரிவித்துள் ளார். இருப்பினும் இதை செயல் படுத்துவது அவ்வளவு எளிதான தாக இருக்காது என்றே தோன்றுகிறது.

விதி 50-ஐக் கொண்டு வராமல் வேறு எவ்வகையில் பிரெக்ஸிட்டை செயல்படுத்துவது என்ற கேள்வி எழாமலும் இல்லை. அவ்விதம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதற்கு எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள்தேவை என்பதை ஆராய வேண்டும் என்று ஸ்டிராச்கிளைட் பல்கலை பேராசிரியர் ஜான் கர்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் கன்சர்வேடிவ் கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிருப்தியே உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலகலாம் என வாக்களித்த நாடா ளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பிலிப்ஸ், கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய் துள்ளார். அரசின் கொள்கையில் முரண்பாடு ஏற்பட்டதே தனது பதவி விலகலுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் சபை இது நிறைவேற்றத்துக்கு பெரும் தடையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அரசியலமைப்பு ரீதியாக இதை எதிர்க்க முடியா விட்டாலும், பிரெக்ஸிட் நடை முறைக்கு முழு எதிர்ப்பு இந்த சபையில் கிளம்பும்.

பிரெக்ஸிட் நிறைவேற்றத்துக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் காரணமாக வெகு விரைவிலேயே பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகங்களும் எழுந்துள்ளன. இருப்பினும் கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களுக்குள்ள பெரும்பான்மையால் விதி 50 நிறைவேற்றத்தை எவ்வித சிரமமும் இன்றி நிறைவேற்றுவர் என்று தோன்றுகிறது.

பவுண்ட் நாணயத்தின் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவது சந்தை யில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத் தியுள்ளது. அதாவது பிரெக்ஸிட் டால் பவுண்ட் மதிப்பு வீழாது என்பதை இது உணர்த்தியுள்ளது. ஆனாலும் சந்தை நிலவரம் குறித்து இப்போதே கணிப்பது கடினம் என்று பேராசிரியர் கர்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் நடமாட்டத்தை எந்த வகையில் கட்டுப்படுத்துவது என்பதில் இன்னமும் தெளிவான கொள்கை வகுக்கப்படவில்லை. இதில் ஹவுஸ் ஆப் காமன்ஸ் உறுப்பினர்கள் நிச்சயம் வேறுப டுவர். பொதுமக்கள் மத்தியில் இது மிகவும் முக்கியமான விஷய மாகும். ஐரோப்பிய நாட்டவரின் நடமாட்டத்தை நிர்ணயிப்பது தொடர்பாக எத்தகைய ஒப்பந் தம் செய்யப்பட உள்ளது என்ப தும் மிக முக்கியமான விஷய மாகும். இதனிடையே தாராள பொருளாதாரத்துக்கு எத்தகைய விலையை பிரிட்டன் தர வேண்டி யிருக்கும் என்பதும் இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வியாகும்.

பிரெக்ஸிட் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும், அது எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கும் என்றே தோன்றுகிறது. இங்கிலாந் திற்குள்ளேயே பல சமூக பிரச் சினைகள் மேலோங்கியுள்ளன. பிரெக்ஸிட் அதை மேலும் அதிகரிக் கத்தான் செய்யும். பிரெக்ஸிட்டில் நீடிக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர்கள் அது தொடர்பான பிரசாரத்தை தொடர்ந்து மேற் கொண்டே இருப்பர்.

ஐரோப்பிய கூட்டமைப்பி லிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என வாக்களித்த மக்கள் அதற்கான பரிசை சுவைத்தே தீர வேண்டும் என்பதை காலம் தீர்மானிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x