Last Updated : 04 Nov, 2016 10:17 AM

 

Published : 04 Nov 2016 10:17 AM
Last Updated : 04 Nov 2016 10:17 AM

டாடா குழும நிறுவனங்களின் ‘தலைவர் பதவியில் இருந்து விலகும் திட்டமில்லை’

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப் பட்டாலும் டாடா குழும நிறுவனங்களின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் திட்டம் சைரஸ் மிஸ்திரிக்கு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இருக் கும் பொறுப்புகளை அவர் தொடர திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. டிசிஎஸ், டாடா மோட்டார், டாடா ஸ்டீல், இந்தியன் ஓட்டல்ஸ், டாடா பவர், டாடா குளோபல் பெவ ரேஜஸ், டாடா கெமிக்கல்ஸ், டாடா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவராக சைரஸ் இருக்கிறார்.

சட்டப்படி டாடா குழுமத்தின் தலைவர் செய்ய வேண்டிய பணி களை சைரஸ் மிஸ்திரி செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலாண்டு முடிவுகளை அறிவிப்பதற்காக இந்தியன் ஓட்டல்ஸ் இயக்குநர் குழு இன்று கூடுகிறது. டாடா கெமிக்கல்ஸ் இயக்குநர் குழு வரும் 10-ம் தேதி கூடுகிறது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x