

டிசிஎஸ் நிறுவனத்தின் இயக் குநர் குழுவில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கு வதற்காக வரும் டிசம்பர் 13-ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட இருக்கிறது. இதில் பங்கு தாரர்கள் கலந்துகொண்டு வாக்களிக்க இருக்கின்றனர். சிறு மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் இயக்குநர் குழு உறுப்பினர்களின் பங்கு மிகவும் குறைவு.
சிறப்பு பொதுக்குழு தேதியை முடிவு செய்வதற்காக நேற்று இயக்குநர் குழு கூடியது. ஆனால் இந்த கூட்டத்தில் சைரஸ் மிஸ்திரி கலந்துகொள்ளவில்லை. டிசிஎஸ் நிறுவன விதிகளின் படி, நிறுவன பங்குதாரர்கள் தலைவரை நிய மனம் செய்ய முடியும். டாடா பவர் நிறுவனத்திலும் இதே விதிமுறை கள் பின்பற்றப்படுகின்றன.
இந்த நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரி வசம் 41 லட்சம் பங்குகள் உள்ளன.