

சர்வதேச அளவில் பார்மசூடிகல்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2008-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
1985-ம் ஆண்டு மேலாண்மை பயிற்சியாளராக ஜிஎஸ்கே நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.
1999-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஜிஎஸ்கே நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் இயக்குநர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்.
ஜிஎஸ்கே நிறுவனத்தின் தென் ஆப்பிரிக்க பிரிவின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இங்கிலாந்து மருத்துவ கண்டுபிடிப்புக் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தவர்.