

தொழிலாளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் ஏடிஎம் மையங்களை அமைக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சகத்திடம் தொழிலாளர் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதிக மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெற்றுள்ளதன் காரணமாக தொழிலாளர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நிறைந்து காணப்படும் பகுதிகளில் அவர்களுக்கு பயன்படும் விதமாக நடமாடும் ஏடிஎம் மையங்களை அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கட்டுமான திட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகமாக வேலை பார்க்கும் பகுதிகளில் நடமாடும் ஏடிஎம் மையங்களை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
தொழில்துறை அமைப்பான அசோசேம் நடத்திய ஒரு கருத் தரங்கில் கலந்து கொண்ட தத்தாத் ரேயா இதைக் குறிப்பிட்டார்.
எங்கெங்கு அதிக அளவில் தொழிலாளர்கள் பணியாற்று கிறார்களோ அங்கு அதிக அளவி லான நடமாடும் ஏடிஎம்-களை இயக்க அனைத்து மாநிலங்களுக் கும் வழிகாட்டுதல்கள் கொடுக்கப் பட்டுள்ளன. தவிர நிதியமைச் சகத்துக்கும் கோரிக்கை வைத்துள் ளேன். விரைவாக இதை நடை முறைப்படுத்துவது அவசிய மானது. தொழிலாளர் அமைச்சகம் இதை பரிசீலனை செய்து வருகிறது.
குறிப்பாக கட்டுமான திட்டம் நடக்கும் இடங்களில் அதிக தொழிலாளர்கள் வேலை பார்ப் பார்கள்; அது போன்ற இடங்களை அடையாளப்படுத்தியுள்ளோம் என்றும், நேற்று நிதியமைச்சரை சந்தித்தபோது இது தொடர்பாக பேசினேன் என்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா குறிப்பிட்டார்.