500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக ரூ.13.6 லட்சம் கோடி தேவை

500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக ரூ.13.6 லட்சம் கோடி தேவை
Updated on
1 min read

மத்திய அரசு அறிவித்துள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களுக்கு மாற்றாக புதிய கரன்சி அளிக்க ரூ.13.60 லட்சம் கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை விநியோகிப்பது மிகப் பெரிய சவாலான விஷயமாக இருக்கும் என தெரிகிறது.

நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சியின் மதிப்பு ரூ.17 லட்சம் கோடியாகும். இதில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 13.6 லட்சம் கோடியாகும்.

செல்லாத நோட்டுகளாக அறி விக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக் கிளை களில் பொதுமக்களால் திருப்பி அளிக்கப்படும். இவற்றை எப்படிக் கையாள்வது என வங்கிகள் திட்ட மிட்டு வருகின்றன. சில வங்கிகள் பணம் எண்ணுவதற்கு இயந்திரங் களை வாங்க முடிவு செய்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கிதான் மிக அதிக எண்ணிக்கையிலான சிடிஎம் எனப்படும் பணம் போடும் வசதி கொண்ட இயந்திரங்களை வைத்துள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான டெபாசிட்களை சமாளிக்கத் திட்ட மிட்டுள்ளது. இவை நாளொன் றுக்கு 150 டெபாசிட்களை ஏற்கின் றன. இனி வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியாவில் மொத்தம் 2.15 லட்சம் ஏடிஎம்கள் உள்ளன. இவற் றின் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றில் நிரப்புவதற்காக 10 ஆயிரம் பணம் நிரப்பப்பட்ட வேண்கள் காவலர்களுடன் ரோந்து சுற்றும். இவற்றின் மூலம் பணம் தீரும் ஏடிஎம்களில் நிரப்பப்படும். ரூ.100 மற்றும் ரூ.50 மதிப்பிலான கரன்சிகளை நிரப்புவதால் பணப் பரிவர்த்தனை அதிகம் மேற் கொள்ள வேண்டியிருக்கும். இத னால் ஒரு வாடிக்கையாளர் அதிக நேரம் ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும் என்று வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in