இந்திய தொழில் அதிபர்களுக்கு விசா எளிதாக்கப்படும்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவிப்பு

இந்திய தொழில் அதிபர்களுக்கு விசா எளிதாக்கப்படும்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவிப்பு
Updated on
1 min read

இந்திய தொழிலதிபர்களுக்கு விசா நடைமுறைகள் எளிதாக்கப் பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே குறிப்பிட்டார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் சிஐஐ ஏற்பாடு செய்த இந்தியா - இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியாவை முக்கிய மான ஒரு வர்த்தக நாடாக பார்க் கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தெரசா மே பேசியதாவது: புதிய விசா நடைமுறைகளின் மூலம் இங்கிலாந்துக்கு இந்திய தொழிலதிபர்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்ள முடியும். இங்கி லாந்திலிருந்து பிற ஐரோப்பிய நாடு களுக்கும் செல்லலாம். இந்த நடை முறை ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த நாட் டிலிருந்து பிரிட்டன் வருவதற்கும் முதல் முறையாக விசா கோரினால் ‘பதிவு செய்யப்பட்ட பயணி’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்கிற சலுகை உள்ளது.

இதன் மூலம் இந்திய தொழி லதிபர்கள் எப்போது வேண்டு மானாலும் இங்கிலாந்துக்கு வர லாம். இரண்டு நாட்டின் வளர்ச் சிக்கு பயன்படும் வகையில் இது இருக்கும். குறிப்பாக இங்கிலாந் துக்கு வருவதற்கான குறிப்பிடத் தக்க நடைமுறைகளை எளிமை யாக்கியுள்ளோம். இந்திய தொழிலதிபர்கள் சில விவரங் களை மட்டும் பதிவு செய்தால் போதும், அவர்கள் ஐரோப்பிய பொருளாதார மண்டல பகுதிகள் மற்றும் பிரிட்டன் விமான நிலையங் களில் மிக துரிதமாக செல்லலாம்.

இங்கிலாந்தில் தொழில்புரிவ தற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, திறந்த பொருளாதா ரத்தை இரண்டு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது வெறும் சட்ட வரைவுகளாக மட்டும் இல்லாமல், முதலீடுகள் மற்றும் ஆக்கபூர்வமான வர்த்தக நடவடிக்கைகளுக்கான முயற்சி யாக இருக்கும் என்றார். பிரதமர் மோடி பேசும்போது இந்தியா ஏற் கெனவே விசா நடைமுறைகளில் மாற்றம் செய்துள்ளதை சுட்டிக் காட்டினார். மேலும் மாணவர்களுக் கும் ஆராய்சியாளர்களுக்கும் விசா சலுகையை வழங்க வேண்டும் என் றும் கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in