Published : 07 Nov 2022 09:05 PM
Last Updated : 07 Nov 2022 09:05 PM

இந்தியாவில் ‘அமேசான் பிரைம் வீடியோ’ மொபைல் எடிஷன் அறிமுகம்: ஆண்டுக்கு ரூ.599 சந்தா

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன்

சென்னை: இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அமேசான் நிறுவனத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தை மலிவு விலையிலான கட்டணத்தில் பயனர்களுக்கு வழங்குகிறது. ஆண்டுக்கு ரூ.599 கட்டண சந்தாவாக பயனர்கள் இதற்கு செலுத்த வேண்டி உள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் கடந்த ஆண்டு இந்தியா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தாலும் அது ஏர்டெல் டெலிகாம் சேவையை பெற்றுள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. இப்போது அது அனைத்து பயனர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயனர்களால் மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியாது.

இந்த மலிவு விலை சந்தா சேவையை ஒரே ஒரு பயனர் மட்டுமே பெற முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது. மேலும், இதனை ஒரு போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது. ஸ்டாண்டர்ட் டெஃபனிஷன் (எஸ்டி) தரத்தில் அனைத்து வீடியோக்களையும் பயனர்கள் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயனர்களுக்கு மல்டிபிள் ப்ரொபைல் பயன்படுத்தும் வசதி இருக்காது. அதேபோல 4கே தரத்தில் வீடியோக்களை பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் புதிதாக பதிவு செய்து மொபைல் எடிஷனை சப்ஸ்கிரைப் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் ஓடிடி தளங்களுக்கு இடையிலான தொழில் போட்டியை சமாளிக்க அமேசா இதனை அறிமுகம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x