

இந்தியாவில் அதிகம் கவர்ந்த பிராண்டுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் டிவிஎஸ் பிராண்ட் 38-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல சென்னையைத் தலை மையிடமாகக் கொண்டு செயல் படும் எம்ஆர்எப் 112-வது இடத் தையும், மெடிமிக்ஸ் 167-வது இடத்தையும் பிடித்துள்ளன. டிஆர்ஏ அமைப்பு ஆய்வு நடத்தி இந்த முடிவுகளைத் தெரிவித்துள்ளன.
ஆச்சி ஃபுட்ஸ், ராம்ராஜ் காட்டன் ஆகிய பிராண்டுகள் 300 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன. பிரீத்தி அப்ளையன்சஸ் 286-வது இடத்தையும், பட்டர் பிளை அப்ளையன்சஸ் 503-வது இடத்தையும் பிடித்துள்ளன. சென்னையிலிருந்து 44 பிராண்டுகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
16 நகரங்களில் பல்வேறு தரப் பினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 1000 பிராண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்தியாவில் மிகவும் கவர்ந்த பிராண்டாக கொரியாவின் எல்ஜி பிராண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு இது இரண்டாமிடத்தில் இருந்தது. தற்போது சோனி இரண்டாமிடத்தைப் பிடித் துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை முதலிடத்தில் இருந்த சோனி தற்போது இரண்டாமிடத்துக்குத் தள்ளப் பட்டுள்ளது.
சாம்சங் மொபைல் 3-வது இடத்தையும், ஹோண்டா 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் மிகவும் கவர்ந்த பிராண்டாக பஜாஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. டாடா நிறுவனம் 7-வது இடத்தையும், மாருதி சுஸுகி 8-வது இடத்தையும், ஏர்டெல் 9-வது இடத்தையும், நோக்கியா 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த ஆண்டுக்கான பட்டியலை டிஆர்ஏ ரிசர்ச் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரமௌலி வெளியிட்டார். இந்தப் பட்டியலில் அம்ருதாஞ்சன் 556-வது இடத்தையும், ஹட்சன் 629-வது இடத்தையும் பிடித்துள்ளன.