

இ-காமர்ஸ் துறையில் உலகின் முன்னணி நிறுவன மான அலிபாபா குழுமத்தின் தலைவர். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2014-ம் செப்டம்பர் மாதத்தி லிருந்து 2015-ம் ஆண்டு ஜுலை மாதம் வரை அலிபாபா குழுமத்தில் பொறுப்புகள் அல்லாத இயக்குநராக இருந்தவர். மேலும் இயக்குநர் குழுவிலும் இருந்தவர்.
2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.
1993-ம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். இந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்பு களில் இருந்தவர்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர். சிட்டி ஹார்வெஸ்ட் அமைப்பின் உறுப்பினராக இருந்தவர்.
பாரிக் கோல்டு கார்ப்பரேஷன் கூட்டமைப்பின் இயக்குநர் குழுவில் இருந்தவர்.
ஈக்விட்டி, கேபிடல் மார்க்கெட்ஸ், செக்யூரிட்டி பிஸினஸ் ஆகிய துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.