

புத்தாக்க மற்றும் நகர் மேம்பாட்டுக்கான அடல் திட்டத்தின் கீழ் (அம்ருத்) 2 ஆயிரம் மருந்துப் பொருள்களின் விலை கள் அவற்றின் அதிகபட்ச விற்பனை விலையை விட 90 சதவீ தம் குறைவான விலையில் கிடைக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நத்தா தெரிவித்தார்.
ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவ வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இத்தகைய குறைந்த விலை யில் மருந்துகள் விற்பனை செய் யும் மையங்கள் மத்திய பிர தேசத்தில் தொடங்கப்பட்டுள்ள தாக அவர் கூறினார்.
மத்தியப் பிரதேச மாநில மக்களின் நலன் காக்கும் விஷயத்தில் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது கட்டப்பட உள்ள உயர் சிகிச்சை மருத்துவ வளாகம் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் இம்மாநில மக்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும். இது தவிர இங்கு மாநில புற்றுநோய் மையம் ரூ. 120 கோடியில் கட்டப்படும் என்றும் அவசர கால சிகிச்சை பிரிவு மத்திய அரசின் சுகாதார திட்டத்தின்கீழ் (சிஜிஹெச்எஸ்) கட்டப்படும் என்றார்.
மாநில மக்களுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை வசதிகளை உருவாக்கித் தர வேண்டிய கடமை எந்தவொரு அரசுக்கும் உண்டு. இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் ரூ. 2 லட்சம் வரை சிகிச்சைக்கு அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. ராஜ்ய பிமாரி சகாயதா திட்டத்தின்கீழ் இது செயல் படுத்தப்படுவதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகான் குறிப்பிட்டார்.