ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை உயர்ந்து 60,968 ஆக விற்பனையானது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 18,098 ஆக விற்பனையானது.
இரண்டு நாள் வீழ்ச்சிக்கு பின்னர், இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 9.28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 29.40 புள்ளிகள் ஏற்றத்துடன் 60865.81 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 0.70 புள்ளிகள் உயர்வுடன் 18053.40 ஆக விற்பனையானது.
முன்னதாக வியாழக்கிழமை சந்தை நிறைவடையும் போது, சென்செக்ஸ் 69.68 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 60,836.41 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30.15 புள்ளிகள் சரிந்து 18,052.70 ஆக நிலைகொண்டிருந்தது.
உலக வர்த்தகத்தின் கலவையான சந்தை போக்கு, பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு என எதிர்மறையான காரணங்களுக்கு மத்தியில் எஃப்ஐஐ முதலீடுகளின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேர்மறை போக்குடனேயே தொடங்கியது.
இன்றைய வர்த்தத்தில், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. மறுமுனையில் ஹெச்டிஎஃப்சி, நெல்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் சரிவில் இருந்தன.
