Last Updated : 04 Nov, 2016 10:55 AM

 

Published : 04 Nov 2016 10:55 AM
Last Updated : 04 Nov 2016 10:55 AM

வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசுடன் லிங்க்டுஇன் ஒப்பந்தம்

உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக நடத்தப்படும் சமூக வலைதளமான லிங்க்டுஇன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. `பிளேஸ்மென்ட்’ என்னும் திட்டம் மூலம் ஏஐசிடிஇ அனுமதி பெற்ற கல்லூரிகள் இதில் இணைக்கப்படும்.

இதன் மூலம் கிராமம், நகரம் என எந்த பாகுபாடும் இல்லாமல் வேலைவாய்ப்பு தேடுவோருக்கு சம வாய்ப்பு உருவாக்கப்படும் என லிங்க்டுஇன் தெரிவித்திருக்கிறது. ஆன்லைன் தேர்வு மூலம் இந்தியாவின் முக்கிய 35 கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற முடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் ஏஐசிடிஇ உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான தகுதி இருக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதுதான் எங்களது இலக்கு என லிங்க்டுஇன் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அக்‌ஷய் கோத்தாரி தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் சோதனையாக தொடங் கப்பட்டது. செப்டம்பரில் ‘பிளேஸ் மென்ட்’ முறையாக தொடங்கப் பட்டது. எட்டு வாரங்களில் 2 லட்சத்துக்கு அதிகமான மாண வர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x