சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி; நிஃப்டி 60 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி; நிஃப்டி 60 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 215 புள்ளிகள் (0.35 சதவீதம்) சரிந்து 60,906 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 62 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,082 ஆக நிலைகொண்டது.

பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 61,058 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 28 புள்ளிகள் குறைந்து 18,116 ஆக இருந்தது.

இந்நிலையில், பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 215.26 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 60,906.09 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 62.55 புள்ளிகள் சரிந்து 18082.85 ஆக இருந்தது.

உலகலாவிய சந்தையின் போக்குகளுக்கு மத்தியில் இந்திய பங்குசந்தைகள் லாப போக்கை தக்கவைத்து கொள்ள தவறின. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தின் முடிவுகள் வெளியான நிலையில், வணிகர்கள் எம்பிசியின் சிறப்பு கூட்டத்தில் கவனம் குவிக்கத் தொடங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளால் இந்திய சந்தைகளின் வர்த்தகம் நிலையற்ற தன்மையில் தொடர்ந்து சரிவில் நிறைவடைந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்றைய வர்த்தகத்தில் சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், விப்ரோ, ஐடிசி, பஜாஜ் பின்ஸ்சர்வ், டாடா ஸ்டீல்ஸ், ஹெச்டிஎஃப்சி, உள்ளட்ட பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. மறுபுறம் எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டிசிஎஸ், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பவர்கிரிட் கார்பரேஷன் போன்ற பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in