Published : 02 Nov 2022 12:55 PM
Last Updated : 02 Nov 2022 12:55 PM

T20 WC | போட்டியை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்க உதவும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் திட்டங்கள்

பிரதிநிதித்துவப் படம்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை நேரலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவை மூலமாக பார்க்க வழிவகை செய்கிறது இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள். அந்த திட்டங்களின் விவரம் குறித்து பார்ப்போம்.

எலக்ட்ரானிக் சாதனங்கள் வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் விளையாட்டு உட்பட அனைத்து செய்திகளையும் செய்தித்தாளின் வழியே தெரிந்து கொண்டு வந்தோம். இது கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கும் பொருந்தும். பின்னர் வானொலியில் கிரிக்கெட் போட்டிகள் நேரலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்படியே அது தொலைக்காட்சிக்கு மாறியது. இப்போது அது நம் கைகளில் உள்ள ஸ்மார்ட் போன்களின் வழியே பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த சேவையை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் வழங்கி வருகிறது. மிக முக்கியமான கிரிக்கெட் தொடர்களை இந்த தளம் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. இருந்தாலும் இதனை பெற பயனர்கள் சந்தா செலுத்த வேண்டி இருக்கும். அத்தகைய சூழலில் தான் தங்கள் பயனர்களுக்கு இந்த சந்தாவை இலவசமாக வழங்கி வருகிறது இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா.

ஜியோ திட்டங்கள்

  • ரூ.1499 திட்டம்: அன்லிமிடெட் போன் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம். அதோடு 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.
  • ரூ.4,199 திட்டம்: அன்லிமிடெட் போன் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 3ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம். 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.

ஏர்டெல் திட்டங்கள்

  • ரூ.181 திட்டம்: தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.
  • ரூ.399 திட்டம்: அன்லிமிடெட் போன் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2.5ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம். 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.
  • ரூ.499 திட்டம்: அன்லிமிடெட் போன் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம். 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.
  • ரூ.599 திட்டம்: அன்லிமிடெட் போன் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 3ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம். 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.
  • ரூ.839 திட்டம்: அன்லிமிடெட் போன் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம். 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.
  • இது தவிர ஒரு வருடத்திற்கான பிளான் வேலிடிட்டி கொண்ட ரூ.2,999 மற்றும் ரூ.3,359 திட்டங்களையும் ஏர்டெல் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா திட்டங்கள்

  • ரூ.151 திட்டம்: மொத்தம் 8ஜிபி டேட்டா மற்றும் 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.
  • ஏர்டெல் நிறுவனம் வழங்குவதை போல அதே வேலிடிட்டி உடன் ரூ.399 மற்றும் ரூ.499 திட்டங்களை வோடாபோன் வழங்குகிறது.
  • ரூ.601, ரூ.901, ரூ.1,066 மற்றும் ரூ.3,099 திட்டங்களின் கீழ் ஓராண்டுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.இது அனைத்தும் ப்ரீபெய்ட் சிம் கார்டு பயனர்களுக்கான ரீச்சார்ஜ் திட்டங்கள்.

இது தவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் மூலம் பயனர்கள் நேரடியாக 3 மாதத்திற்கான சந்தாவை வெறும் 99 ரூபாய்க்கு சலுகை விலையில் பெற முடியும். இதற்கான அசல் கட்டணம் ரூ.149 ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x