

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஆதெர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர். 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கூடுதல் மேலாளராக பணியாற்றியுள்ளார்.
பிஹெச்இஎல், மெர்சிடஸ் பென்ஸ், தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம் போன்றவற்றில் பயிற்சி மாணவராக பயிற்சி பெற்றவர்.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் தொழில்முனைவோர் மையத்தின் மாணவர் தலைவராக இருந்தவர்.
தொழில்முனைவு, பொருள் வடிவமைப்பு, தகவல் பகுப்பாய்வு உள்ளிட்டவற்றில் வல்லுநர்.
மனித சக்தியால் இயக்கப்படும் மோட்டார், கழிவுகள் மூலம் மின் சக்தி உள்ளிட்ட பல ஆய்வு திட்டங்களை மேற்கொண்டவர்.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இன்ஜினீயரிங் டிசைன் பாடப்பிரிவில் இரட்டைப் பட்டம் பெற்றுள்ளார்.