டிரைவர் இல்லா கார்கள் இந்தியாவில் சாத்தியமில்லை: மாருதி சுசுகி தலைவர் ஆர்சி பார்கவா கருத்து

டிரைவர் இல்லா கார்கள் இந்தியாவில் சாத்தியமில்லை: மாருதி சுசுகி தலைவர் ஆர்சி பார்கவா கருத்து
Updated on
1 min read

டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் இந்தியாவில் சாத்தியமில்லை என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஆட்டொமொபைல் துறையினர் தானியங்கி கார் களை சோதனை ரீதியில் இயக்கிப் பார்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆர்சி பார்கவா இந்தியா வில் இது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடிக்காத நிலை யில் இத்தகைய கார்கள் சாத்திய மில்லை என்று பார்கவா குறிப்பிட் டுள்ளார்.

டிரைவர்கள் இல்லாத கார்களின் வரவு ஆட்டோமொபைல் துறை யில் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கேள்விக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு கூறினார். இந்தியாவின் சாலை போக்குவரத்து நிலைமைகளில் இந்த தொழில்நுட்பத்தை முயற் சித்து பார்ப்பவர்களை நான் ரசிக் கிறேன். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இங்கு வேலை செய்யாது, ஏனென்றால் இங்கு யாருமே சாலை விதிகளை மதிப்பதில்லை. எவரும் இங்கு சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில்லை.

தொழில்நுட்ப கருவியைக் கொண்டு வாடிக்கையாளர்களின் நடத்தையை எப்படி கணிக்க முடி யும்? எவரும் வாடிக்கையாளர்களின் நடத்தையை கணித்துவிட முடியாது என்று குறிப்பிட்டார்.

வாடகைக் கார் நிறுவனங் களான ஓலா, உபெர் போன்ற நிறுவனங்களில் வளர்ச்சியால் ஆட்டோமொபைல் துறையில் ஏற் படும் தாக்கம் குறித்து குறிப்பிடும் போது, இது ஆட்டோமொபைல் துறைக்கு நல்ல விஷயம்தான். மக்கள் தங்களின் போக்குவரத் துக்கு ஏற்ப கார்களை பயன்படுத்து வதில் இது போன்ற நிறுவனங்கள் தங்களது திறன்களை வெளிப்படுத் துகின்றன. கார்களை எவ்வளவு திறமையாக பயன்படுத்த வேண் டுமோ அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்கின்றன. இது சிறந்த திறமை என்றும் கூறினார்.

எதிர்காலத்தில் இது போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் கார்களை வாங்குவார்கள். மேலும் இது போன்ற நிறுவனங்கள் கார்களை திறமையாக பயன் படுத்துவதால் புது கார்களை மாற்று வதற்கான சுழற்சி காலம் விரை விலேயே வரும். இது ஆட்டோ மொபைல் துறைக்கு ஆரோக்கிய மானது என்றும் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in