

கடந்த நான்கு நாட்களில் வங்கிகளில் பெறப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் கோடியாகும். இத்தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு களை நேற்று முன்தினம் மத்திய அரசு சிறிது தளர்த்தியது. இதன்படி தினசரி ரூ. 4,000 ஆக இருந்த வரம்பு ரூ. 4,500 ஆக உயர்த்தப்பட்டது. வங்கியின் சேமிப்புக் கணக்கிலிருந்து தினசரி பெறப்படும் தொகையின் அளவு ரூ.10 ஆயிரமாகவும், வாராந்திர அளவு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரமாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. இதேபோல ஏடிஎம் களில் தினசரி எடுக்கும் பணத்தின் அளவு ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் பணம் எடுப்பதில் பொதுமக்கள் படும் சிரமத்தின் எதிரொலியாக இத்தகைய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.