

இண்டிகோ ஏர் விமான சேவை நிறுவனமான இண்டர் குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தினசரி பொறுப்புகளில் இல்லாத செயல் தலைவர்.
விமான போக்குவரத்து துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத் தின் 1984-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர். 1994-ம் ஆண்டு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி ஏர்பிரான்ஸ் நிறுவனத்தில் திட்ட மேம்பாடு பிரிவின் செயல் துணைத் தலைவராக இணைந்தார்.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை யுஎஸ் ஏர்வேஸ் குழுமத்தில் இருந்தார். அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தவர். வேர்ல்டுஸ்பென் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
போர்ப்ஸ் வெளியிட்ட அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர். உலக பணக்காரர்களில் ஒருவர். இவரது சொத்து மதிப்பு 220 கோடி டாலர்கள்.
அமெரிக்க வாழ் இந்தியர். கான்பூர் ஐஐடி கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டமும், பென்சில்வானியாவில் உள்ள வார்ட்டன் பிசினஸ் பள்ளியில் நிர்வாக மேலாண்மையியல் பட்டமும் பெற்றவர்.