Published : 25 Oct 2022 08:31 PM
Last Updated : 25 Oct 2022 08:31 PM

இந்தியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம் விதிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கைகளில் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதாக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம் விதித்து இந்திய வணிகப் போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தனது நடத்தைகளை மாற்றியமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மொபைல் ஆப்ஸ்கள் அனைத்து பயனாளர்களையும் சென்றடைய கூகுள் ப்ளே ஸ்டோர் அத்தியாவசிய ஊடகமாக மாறி விட்டது. ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களுக்கான உரிமம் பெற்ற ஓஎஸ், மறைமுகமாக கூகுளின் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களுக்கான ஆப் உற்பத்தியாளர்களின் முக்கிய விநியோகஸ்தராக கூகுள் ப்ளே ஸ்டோர் உள்ளது. இது சந்தைக்கு வரும் ஆப் வசதிகளை பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களுக்கான உரிமம் பெற்ற ஓஎஸ்-கள் பிறவற்றின் ஓஎஸ்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது என்று இந்திய போட்டிகள் ஆணையம் (The Competition Commission of India - CCI) தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x