

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்கிழமை வர்த்தக நேர தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 150 புள்ளிகள் (31.05 சதவீதம்) உயர்ந்து 59,862 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 227 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயர்ந்து 17,803ஆக இருந்தது.இருந்த போதிலும் சந்தையின் போக்கு நிலையில்லாமல் ஏற்றஇறக்கத்துடனேயே காணப்பட்டது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 9.34 மணியளவில் சென்செக்ஸ் 31.05 புள்ளிகள் உயர்வுடன் 59862.71 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 227.10 புள்ளிகள் உயர்ந்து 17803.40 ஆக நிலைகொண்டிருந்தது.
ஆனால், உலகளாவிய மந்தமான சந்தைபோக்கு, கச்சா எண்ணைகளின் விலையேற்றம் போன்ற காரணங்களால் இந்திய சந்தைகளும் காலை வர்த்தகத்தை மந்தமான போக்குடனேயே தொடங்கின. இருந்த போதிலும் வர்த்தகம் நிலையான போக்குடன் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டன.
இன்று காலையில், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், இன்போசிஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. மறுபுறம் ஐடிசி, எஸ்பிஐ, ஹெச்எஃப்டி, டைட்டன் கம்பெனி, கோட்டாக் மகேந்திரா வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்திருந்தன.