நேரடி விற்பனை தொழிலுக்கான நெறிமுறைகள் உருவாக்கப்படும்: வணிகத்துறை கூடுதல் ஆணையர் தகவல்

நேரடி விற்பனை தொழிலுக்கான நெறிமுறைகள் உருவாக்கப்படும்: வணிகத்துறை கூடுதல் ஆணையர் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் நேரடி விற்பனை தொழிலுக்கான நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையர் ரீட்டா ஹரீஷ் தக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபை (ஃபிக்கி) சார்பில் தமிழகத்தில் நேரடி விற்பனை துறை குறித்த அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற் றது. இதில் தமிழ்நாடு தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையர் ரீட்டா ஹரீஷ் தக்கர் கலந்துகொண்டு, அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

நாட்டில் பல்வேறு நேரடி விற்பனை தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும், அவற்றுக் கென முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததாலும், இதுவரை வகுக்கப்படாததாலும், பல நிறுவனங்கள் தோல்வியை சந்தித்தன. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு, நேரடி விற்பனை தொழிலுக்கான நெறி முறைகளை உருவாக்க திட்டமிட் டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

ஃபிக்கி தலைவரின் ஆலோசகர் பி.மாருதி பேசும்போது, நேரடி விற்பனை தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்றால், அத்துறை கிராமங்கள் அளவில் வளர்ச்சி பெற வேண்டும். அதற்கு இத்தொழிலில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.

அறிக்கையில் கூறியிருப்ப தாவது: உற்பத்தி பொருள் கடை களுக்குச் செல்லாமல், நேரடியாக பொதுமக்களை சந்தித்தும், பணி யாளர்களை அவர்கள் பணி செய்யும் இடத்தில் சந்தித்தும் பொருட்களை விற்பனை செய்யும் முறையே நேரடி விற்பனையாகும். இந்த நேரடி விற்பனை தொழில்துறை இந்தியாவில், வரும் 2025-ம் ஆண்டில் ரூ.64,500 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ரூ.7,500 கோடியாக உள்ள விற்பனை சந்தை மதிப்பு, வரும் 2025-ம் ஆண்டில் ரூ.8,500 கோடியாக உயர வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதில் 58 சதவீதம் பெண்களாக இருப்பார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in