

ஸ்மார்ட்போன் வாங்கினால் ஸ்மார்ட் டிவி இலவசம், சுலப தவணையில் ரூ.1-க்கு ஸ்மார்ட்போன் என, தீபாவளியை முன்னிட்டு பல சலுகைகளை பிரியதர்ஷினி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் அமைந்தகரை, அயனாவரம், ஆவடி, கூடுவாஞ்சேரி, கே.கே.நகர், கொளத்தூர், முகப்பேர், மூலக்கடை, நங்க நல்லூர்,பல்லாவரம், பாரிமுனை, பூந்தமல்லி, செங்குன்றம், தாம்பரம், திருவல்லிக்கேணி, வேளச்சேரி, மேற்கு மாம்பலத்தில் பிரியதர்ஷினி ஷோரூம்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு, அதிரடி சலுகைகளை பிரியதர்ஷினி வழங்கி வருகிறது.
அந்த வகையில், பிரியதர்ஷினியில் ஸ்மார்ட்போன் வாங்கினால் ஸ்மார்ட் டிவி இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பிராண்டில் குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன் வாங்கும்போது இந்த சலுகையை பெறலாம். பிரியதர்ஷினியின் அனைத்து கிளைகளிலும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஸ்டாக் உள்ளவரை நிபந்தனைக்கு உட்பட்டு இந்த சலுகை வழங்கப்படும்.
ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர் பட்ஸ். நெக்பேண்ட், உடனடி கேஷ்பேக் சலுகை, தள்ளுபடி சலுகை, எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆகியவையும் உண்டு. மொபைல் போன் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசுகளும் உண்டு.
பிரியதர்ஷினியின் அனைத்து ஷோரூம்களிலும் 32 இன்ச், 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் ஆகிய அளவுகளில் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவிக்கள் விற்கப்படுகின்றன. ஒன்பிளஸ், ரெட்மீ, ரியல்மீ, டிசிஎல், வைபர் நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிக்கள் இங்கு கிடைக்கின்றன.
ஒரு ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் வாங்கும் சுலப தவணை வசதியும் உண்டு. அதன்படி, சாம்சங்,ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்களை ரூ.1 கொடுத்து வாங்கலாம். பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மூலம் மீதியை சுலப தவணையில் செலுத்தலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.