

நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் நிதி அமைச்சகம் இறங்கி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவன அதிகாரிகளையும், ஆகஸ்ட் 28ம் தேதி த ஜப்பான் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி(ஜே.சி.ஆர்.ஏ) அதிகாரிகளையும் நிதி அமைச்சக அதிகாரிகள் சந்திக்க இருக்கிறார்கள்.
பிட்ச் மற்றும் மூடி நிறுவன அதிகாரிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நிதி அமைச்சக அதிகாரிகள் சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பில் இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்துவதற்கான முயற்சி இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.