

டாக்டர் ரெட்டீஸ் லேப் லாபம் ரூ. 550 கோடி
டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 52.49% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 360 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.550 கோடியாக உயர்ந்திருக்கிறது. நிகர விற்பனை 23% உயர்ந்திருக் கிறது. கடந்த ஜூன் காலாண் டில் ரூ.2,844 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது 3,517 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அதே சமயம் நிறுவனத்தின் செலவுகளும் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஜூன் காலாண்டில் ரூ.879 கோடி யாக இருந்த செலவுகள் இப்போது ரூ. 1,067 கோடியாக இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையும் ரூ.242 கோடியிலிருந்து ரூ. 387 கோடியாக உயர்ந்திருக்கிறது.
லுபின் நிகர லாபம் 56% உயர்வு
லுபின் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 56% உயர்ந்து ரூ.624 கோடியாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனை அதிகரித்ததன் காரணமாக நிகர லாபம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண் டில் ரூ.401 கோடியாக நிகர லாபம் இருந்தது.கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.2,420 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.3,284 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியவில் பிஸினஸ் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்று லுபின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் குப்தா தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் வருமானம் 46% உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானம் 29% உயர்ந்திருக்கிறது.
பேங்க் ஆப் இந்தியா லாபம் 16% சரிவு
பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 16 சதவீதம் சரிந்து 805 கோடி ரூபாயாக இருக் கிறது. இதர செலவுகள் மற்றும் வாராக்கடனுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்த தால் நிகர லாபம் குறைந்திருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 964 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது.
கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ. 9,722 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.11,328 கோடியாக உயர்ந்திருக்கிறது.வாராக் கடன்களுக்காக கடந்த வருடம் ஜூன் காலாண் டில் 694 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. இப்போது இந்த தொகை அதிகரித்து ரூ.893 கோடியாக இருக்கிறது. மொத்த வாராக்கடன் 3.28 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஐஐஎப்எல் ஹோல்டிங்க்ஸ் லாபம் ரூ. 93 கோடி
நிதித் துறையில் செயல்பட்டு வரும் ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 48% உயர்ந்து 93.80 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 63.20 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது நிகர லாபம் 15% உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானம் 17% உயர்ந்திருக்கிறது.
கடந்த வருடம் 673 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 789 கோடி ரூபாயாக இருக்கிறது. பங்குச்சந்தை வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமானம் 107 கோடியாக இருக்கிறது. இது கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது