

ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேற் பட்ட கடன் தொகையைச் செலுத் தாதவர்களின் பெயர்களை வெளியிடுவதால் இனி இது போன்று எங்கும் நடக்காதவாறும் வாராக் கடன்கள் ஏற்படுவதற்கு மூல காரணத்தையும் கண்டறிய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வங்கிகளில் ரூ.500 கோடிக்கும் மேல் கடன் வாங்கி அதனை செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திர சூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
``கடன் வாங்கி அதனை திருப் பிச் செலுத்தாதவர்களின் பெயரை வெளியிடுவதால் இனி எங்கேயும் இதுபோன்று நடக்காதவாறு தடுக் கலாம். மேலும் குவிந்துகிடக்கும் வாராக் கடன்கள் ஏற்பட மூலக் காரணம் என்ன என்பதையும் கண் டறிய முடியும். இதை எவ்வாறு சரிசெய்ய முடியும் என்பதையும் கண்டறிய முடியும்’’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர் தெரிவித்துள்ளார். வாராக் கடன் மிகப் பெரிய நெருக் கடியாக இருக்கிறது அதற்கு தீர்வு களை கண்டுபிடிக்க வேண்டிய தேவை உள்ளது. வாராக் கடன் இந்த அளவுக்கு அதிகமாவ தற்கு காரணம் என்ன என்று சொலிக் டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வாராக் கடன் பற்றியும் மற்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயவும் ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறது. விரைவில் இந்தக் குழு அறிக்கையை தாக்கல் செய் யும். மேலும் வங்கிகள் வாராக் கடனை வசூலிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றனர் என்று சொலிக்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.