

தெற்கு ரயில்வேயில் முன்பதிவு பெட்டிகளில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடந்த 6 மாதங்களில் 30 கோடியே 20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
கரோனா பாதிப்பு குறைந்த பின்பு, ரயில் சேவை படிப்படியாக அதிகரித்து, தற்போது 99 சதவீத ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ரயில்களில் முன்பதிவுமற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் முன்பதிவு பெட்டிகளில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 30 கோடியே 20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏப்ரல் 2022 முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 30 கோடியே 20 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகமாகும். இது தவிர, முன்பதிவு செய்யப்படாத மற்றும் புறநகர் ரயில்களில் படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.