Published : 16 Oct 2022 05:44 AM
Last Updated : 16 Oct 2022 05:44 AM

10 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைவு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனையாகிறது. பவுனுக்குரூ.360 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.40,736-க்கு விற்பனை யாகிறது.

நகை வாங்குவோர் மகிழ்ச்சி

கடந்த 6-ம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.38,720-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. இதனால், தீபாவளி மற்றும் திருமண விசேஷங்களுக்கு நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு கிராம் வெள்ளி ரூ.60.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.60,500 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x