

இந்தியன் வங்கி 47% டிவிடெண்ட் அறிவிப்பு
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தனது முதலீட்டாளர்களுக்கு 47 சதவீத இறுதி டிவிடெண்ட் வழங்குவதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதற்கான முடிவு சமீபத்தில் நடந்த வங்கியின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
’இந்திய நிறுவனங்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும்’
முன்னணி எஃப்.எம்.சி.ஜி. நிறுவனமான ஹெச்.யூ.எல். நிறுவனத்தின் 81-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் பேசிய இந்நிறுவனத்தின் தலைவர் ஹரிஷ் மன்வானி, இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றார்.
எதிர்கால மாற்றங்களை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பம், திறமை, சரியான தலைமை உள்ளிட்ட விஷயங்கள் தேவை என்றார். நிறுவனங்கள் சவால்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்கிற சமயத்தில் வாய்ப்புகளையும் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.