

ட்விட்டர் இந்தியா தலைவர் ரிஷி ஜேட்லி இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பர்மிந்தர் சிங் நேற்று ராஜினாமா செய்தார். இவர் இந்தியா மட்டுமல்லாமல் தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், வட அமெரிக்கா பகுதிகளுக்கும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
முன்னாள் ஊழியர்கள் போல இவரும் தனது ராஜினாமாவை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். 3 வருடங்கள் இந்த பதவியில் இருந்துவிட்டேன். அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. வெளியேறு வதற்கு இதுதான் சரியாக காலம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக் கிறார்.
இதனைத் தொடர்ந்து மாயா ஹரி, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கு நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தரன்ஜீத் சிங் தொழில் பிரிவுகளை கவனித்துக்கொள்வார் என்றும் அறி விக்கப்பட்டிருக்கிறது. பர்மிந்தர் சிங் கடந்த 2013-ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார்.