

முன்னணி தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் `ஸ்பைசி ஆண்டு விற்பனை’ திட்டத்தை நேற்று அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் மூலம் 500 கிலோ மீட்டர் வரையிலான உள்நாட்டு ஒருவழி விமான பயணத்திற்கு ரூ. 737 (வரிகள் உட்பட) என்ற கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
4 நாட்கள் இந்த விமானப் பயண சலுகை திட்டம் நடை பெறவுள்ளது. இந்த சலுகை விமானப் பயணத்திற்கான முன்பதிவு நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. இந்த கட்டண சலுகை, 2017-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி முதல் அக்டோபர் 27-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு மட்டுமே.
நிறுத்தமில்லா விமானங்களுக்கு மட்டுமே இந்த சலுகைப் பொருந்தும். மேலும் பயண தூரத்திற்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபடும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.