Published : 11 Oct 2022 06:14 AM
Last Updated : 11 Oct 2022 06:14 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4,775-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,416க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.64.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.64,500 ஆக உள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x